என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திசையன்விளை கோவை அரசு பஸ்"
நாசரேத்:
திசையன்விளையில் இருந்து தினமும் மாலை 5.40 மணிக்கு அரசு விரைவு பஸ் புறப்பட்டு சாத்தான்குளம், நாசரேத், நெல்லை வழியாக கோவைக்கு சென்றது. இதே போல் கோவையில் இருந்து மாலை 7 மணிக்கு புறப்பட்டு நெல்லை, நாசரேத் வழியாக திசையன்விளைக்கு சென்றது. இந்த பஸ் கடந்த மே மாதம் முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து நாசரேத் நகர காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் பீட்டர் கூறியதாவது:-
திசையன்விளையில் இருந்து கோவைக்கு நாசரேத் வழியாக கடந்த சில ஆண்டுகளாக சென்று வந்த அரசு பஸ் திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளதால் நாசரேத் - சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். நாசரேத் வழியாக கோவைக்கு சென்ற முதல் அரசு விரைவு பஸ் ஆகும். இந்த பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.